சேகர் ரெட்டி டைரி விவகாரம்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., உட்பட 14 பேருக்கு ஐ.டி., நோட்டீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 22, 2021

சேகர் ரெட்டி டைரி விவகாரம்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., உட்பட 14 பேருக்கு ஐ.டி., நோட்டீஸ்!

சேகர் ரெட்டி டைரி விவகாரம்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., உட்பட 14 பேருக்கு ஐ.டி., நோட்டீஸ்!

சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. தொடக்கத்தில் சிறிய கான்ட்ராக்டராக இருந்து, பின்னர் அரசியல் தொடர்புகள் கிடைத்ததும் பெரிய அளவில் உயர்ந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, வருமான வரித் துறையினர் இது குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில், சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி என, முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த வகையில், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, தி.மு.க.,வில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad