கொரோனா: பிள்ளையாரால் பரவும்; முப்பெரும் விழாவால் பரவாதா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

கொரோனா: பிள்ளையாரால் பரவும்; முப்பெரும் விழாவால் பரவாதா?

கொரோனா: பிள்ளையாரால் பரவும்; முப்பெரும் விழாவால் பரவாதா?

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சுகாதாரத்துறை, ‘வீடுகளுக்கு உள்ளேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இதே காரணத்துக்காக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

இதையடுத்து, மக்கள் தங்கள் வீட்டிற்கு உள்ளேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, சதுர்த்தி வழிபாடுகளை நடத்தினர். அன்று, மாநிலம் முழுக்க முக்கிய நகரங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படாமல் கண்காணித்தனர். சில இடங்களில் அப்படி வைக்க முயன்றவர்களை தடுத்தனர்.

இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு ஆண்டுதோறும் திமுகவினர் முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், அறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தஞ்சையில் உள்ள அண்ணா சிலைக்கு திரளான அளவில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க. தொண்டர்கள் வந்து மாலை அணிவித்தனர். மதிமுகவினர் தனியாகவும், அதிமுக வினர் தனியாகவும் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தி.மு.க.வினருடன் தி.க.வினரும் கலந்துகொண்டனர். திமுக மாவட்ட செயலாளரும் திருவையாறு எம்.எல்.ஏ.வுமான துரை.சந்திரசேகர், தஞ்சை எம்.எல்.ஏ. டிகேஜி நீலமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும், இந்த நிகழ்வில் நகர ஒன்றிய பொறுப்பில் உள்ளவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்களும் பங்கேற்றனர். மொத்தம் எழுநூறு பேருக்குமேல் திரளாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கூட்டம் கூடக்கூடாது என தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்தித்துக்கு தடை விதித்த நிலையில் முப்பெரும் விழாவையொட்டி கூட்டமாக வந்து தலைவர்கள் சிலைக்கு கட்சியினர் மாலையிட்டது சமூக ஆர்வலர்களிடேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad