இவங்களே கேஸ் போடுவாங்களாம்...இப்போ இவங்களே டைம் கேட்பாங்களாம்... திமுகவை கலாய்க்கும் சிவிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

இவங்களே கேஸ் போடுவாங்களாம்...இப்போ இவங்களே டைம் கேட்பாங்களாம்... திமுகவை கலாய்க்கும் சிவிஎஸ்!

இவங்களே கேஸ் போடுவாங்களாம்...இப்போ இவங்களே டைம் கேட்பாங்களாம்... திமுகவை கலாய்க்கும் சிவிஎஸ்!
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அரசு பயப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கடலாடி குளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் சட்ட த்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியது:

திமுக அரசு ஒருபக்கம் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என்று சொல்ல, அவர்களின் பேச்சை நம்பி தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு தேர்தலுக்குத் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என கூறிவிட்டு இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத்தில் திமுக புதியதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதாவது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.ஆளுகின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தனர்.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சொன்ன திமுக அரசே இன்று அதே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என சொல்லுகின்றது.இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு மீது 120 நாட்களில் திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் தேர்தலை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad