அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு!


ஆசிரியர்களின் கல்விக்காக மாநில அரசின் வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தை ஒட்டி, 122 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான ஆசிரியர்கள் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரையாளரகள், DIET மற்றும் SCERT பயிற்றுநர்கள், கலை, இசை, விளையாட்டு ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கடந்த 5 ஆண்டுகளில் நமது மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை உயர்கல்விக்காக இங்கிலாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் படிப்புகளை கற்றறிந்து வந்துள்ளனர். அந்தளவிற்கு ஆசிரியர்கள் மிகச்சிறந்த அறிவுடன் விளங்குகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad