தமிழக அரசின் பணி நிரந்தர அறிவிப்பு; வேல்முருகன் விடுக்கும் கோரிக்கை!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் , நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் உறவினர்களே, அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இச்சூழலில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடியவர்கள் செவிலியர்கள் தான். கொரோனா காலத்தில் மன அழுத்தம்,
மனச்சோர்வு, பதற்றம் ஆகிய உளவியல் பிரச்சினைகளால் செவிலியர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மக்களுக்கு சிறந்த முறையில் தொண்டு செய்தனர்.
பணிநியமன ஆணை
இந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்.ஆர்.பி போட்டித் தேர்வின் மூலம் முறையாகத் தேர்வு எழுதி கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் 15 ஆயிரம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஒப்பந்த முறையில் ரூ. 15,000 மாத ஊதியத்தில் பணி செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கும்போது உறுதியளிக்கப் பட்டது.
ஒப்பந்தம் முறையில் வேலை
ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் இதுவரை சுமார் 3 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம்
செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்துவருகின்றனர். எனவே, ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
தமிழக அரசுக்கு கோரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன். குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், நிரந்தர பணியில் உள்ள செவிலியர்களுக்கு இணையாகப் பணி செய்யும் ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற சமத்துவத்தை நிறுவ வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும்
பல்நோக்கு மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில்
காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணியிடங்களை நிரப்பவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment