வாடகைப் படி கிடையாது: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!
அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களில் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு ஒவ்வொரு
காலத்துக்கும் ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்பட்டுக் கொண்டே வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.
இதையடுத்து, 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்தார். இதனிடையே, இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
அதன்தொடர்ச்சியாக திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து
12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
No comments:
Post a Comment