கூட்டுறவு கடன் தள்ளுபடி: எடப்பாடி படம் போட்டு ஸ்கோர் செய்த ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 17, 2021

கூட்டுறவு கடன் தள்ளுபடி: எடப்பாடி படம் போட்டு ஸ்கோர் செய்த ஸ்டாலின்

கூட்டுறவு கடன் தள்ளுபடி: எடப்பாடி படம் போட்டு ஸ்கோர் செய்த ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்து.
கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து,விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி படங்கள் இடம் பெற்றுள்ளது விவசாயிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னையன்‌ என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில், “விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று 2021 ஜனவரி 13 ஆம் நாள் திருவள்ளூரில் நடந்த பொங்கல் விழா கூட்டத்தில் இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு மு .க .ஸ்டாலின் அறிவித்தார். ஏப்ரல் மாதம் தேர்தல் நெருங்கியதால் திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் இந்த அறிவிப்பு அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிந்திக்க வைத்தது.

விவசாயிகளின் வாக்கு வங்கியை ஈர்ப்பதற்காக உடனடியாக ரூ 12,000 கோடி கடன் தள்ளுபடியை அதிமுக அரசு அறிவித்து, அதற்கான ஆணைகளையும் வெளியிட்டது . ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு .க .ஸ்டாலின் முதல்வராகி நீண்ட ஆய்வுக்கு பிறகு விவசாயிகளின் முறையான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச் சீட்டுகளும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

பரந்த எண்ணத்தோடும் சிறந்த கருத்துக்களாலும் அரசை வழிநடத்தும் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் படமும் ஜெயலலிதாவின் படமும் போட்ட சான்றிதழ் வழங்கி கடன் தள்ளுபடி ஆணையை தற்போது வழங்கி வருகிறார்கள் .

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் நகைக்கடன் பெற்றிருந்த எனக்கு அம்மாபாளையம் பசுவபட்டி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உழவர்கள் சார்பாக நன்றி பாராட்டுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad