வீரமணி வீட்டில் சிக்கியது என்ன? கருணை காட்டுகிறதா லஞ்ச ஒழிப்புத்துறை?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளையும், சோதனைகளையும் வேகப்படுத்தியுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அடுத்தபடியாக எந்த மாஜி அமைச்சர் சிக்குவார் என்று விவாதங்கள் நடைபெற்ற நிலையில்
கே.சி.வீரமணியை குறிவைத்து அவரது வீடு, அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என நேற்று 35 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் ஆறு இடங்களும் பெங்களூரில் இரு இடங்களும் அடங்கும்.
இதில் 34 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்,
5 கணினி கார்டு டிஸ்க், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு வழக்குக்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அறப்போர் இயக்கம் கொடுத்து வருகிறது. இதற்கு முன் ரெய்டு நடத்தப்பட்ட எஸ்.பி.வேலுமணி மீதும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி அந்த இயக்கம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அப்போது கே.சி.வீரமணி குறித்தும் புகார்களை அடுக்கியது. அதைத் தொடர்ந்து கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அறப்போர் இயக்கத்தினர், “2011-21 வரை அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுத்தோம். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை 2016-21 ஐந்து வருடங்களில் 28 கோடி ரூபாய் அதிகம் சொத்து சேர்த்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது” என அதிருப்தி தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment