"மிகவும் ஆபத்தானவர்.. இவரை வெற்றி பெற விட மாட்டேன்!" - மாஜி முதல்வர் அமரீந்தர் சிங் விடாபிடி!
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், நவ்ஜோத் சிங் சித்துவை வெற்றி பெற விட மாட்டேன். அவர் தேர்தலில் களமிறங்கினால், அவருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்குவேன் என, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், அதே கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், தொடக்கத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாநில அரசியலில் புயலைக் கிளப்பின. இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்ற கட்சி மேலிடத்தின்
முயற்சி தோல்வியில் முடிந்ததுகடும் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங், அண்மையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன். இனி மேலும் இந்தக் கட்சியில் தொடர முடியாது என, தெரிவித்தார். இதை அடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, முதன்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார். இவர், நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல்காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அமரீந்தர் சிங் சித்துவுக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான கருத்து மோதலால், காங்கிரசின் செல்வாக்கு சரிந்தது. அண்மையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டது,
முதலமைச்சராக இருந்த அமீரந்தர் சிங்கிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அமரீந்தர் சிங்கிற்கு தெரியாமல், பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் கூட்டங்களை நடத்தினர். இதனால், அமரீந்தர் சிங் கடும் அதிருப்தி அடைந்தார்.
No comments:
Post a Comment