ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சருக்கு கொரோனா - உலக தலைவர்கள் அதிர்ச்சி!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரேசில் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மார்செலோ குவெரோகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுக் கூட்டம் நடைபெற்று
வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மார்செலோ குவெரோகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுடன், நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் முதலீட்டாளர்களை, பிரேசில் சுகாதாரத் துறை மார்செலோ குவெரோகோ சந்தித்துப் பேசினார். மேலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சந்தித்த போது, அமைச்சர் மார்செலோ குவெரோகோவும் உடன் இருந்தார்.
இதை அடுத்து அமைச்சர் மார்செலோ குவெரோகோவுடன் நெருங்கிய தொடர்பில்
இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. முடிவில், அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment