கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000 - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 22, 2021

கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000 - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000 - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அளித்த உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை, ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுட உள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. இந்த இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்துத் தெரிவித்ததாவது:


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதில், மத்திய அரசுக்கும் பங்குள்ளது. மாநிலத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாநில அரசு சார்பில் நிதியுதவி அளிப்பது சாத்தியமில்லாதது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூற முடியாது.
மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad