மூன்று முறை தற்கொலை செய்து கொண்ட ஓபிஎஸ்: நாஞ்சில் சம்பத் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

மூன்று முறை தற்கொலை செய்து கொண்ட ஓபிஎஸ்: நாஞ்சில் சம்பத் தகவல்!

மூன்று முறை தற்கொலை செய்து கொண்ட ஓபிஎஸ்: நாஞ்சில் சம்பத் தகவல்!



அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மூன்று முறை தற்கொலை செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
அதிமுக இரட்டை தலைமைக்கு இடையே ஏராளமான மோதல் போக்குகள் நிலவி வந்தாலும், இன்னும் வெளிப்படையாக எதுவும் பூதாகரமாக வெடிக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் தொடங்கி ஆரம்பித்த பிரச்சினை கடைசியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை வந்துள்ளது. கட்சியை ஒற்றை தலைமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர ஓபிஎஸ் முனைப்பு காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலாவுடன் ஓபிஎஸ் சென்று விடுவார் என்று திமுக ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உறுதியாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது; அவரை விமர்சிக்காதது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஓபிஎஸ்-இன் இந்த தொடர் மௌனம், சசிகலாவிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இன்னும் உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலில், மூன்று தடவை தற்கொலை செய்துகொண்டவர் ஓபிஎஸ் என்று தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராவதற்கு முகமாக இருந்த சசிகலாவை எதிர்த்து 'தர்ம யுத்தம்' நடத்தியது முதலாவது தற்கொலை. ஏற்கெனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர், துணை முதல் அமைச்சராவதற்கு ஒப்புக்கொண்டது இரண்டாவது தற்கொலை. அடுத்து, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பி.எஸ்-தான் 'எதிர்க்கட்சித் தலைவர்' ஆகவும் இருந்திருக்கவேண்டும். ஆனால், இந்த வாய்ப்பையும்கூட எடப்பாடி பழனிசாமிக்குத் தாரை வார்த்துவிட்டு, 'துணை எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்பை ஓ.பி.எஸ் வாங்கிக்கொண்டது மூன்றாவது தற்கொலை!” என்றும் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின்போது, நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என்று கண்ணதாசன் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் பேசினார். அதன்பிறகு அதுதொடர்பாக பல்வேறு தருணங்களில் கேள்வி எழுந்தபோது, அது பரம ரகசியம் என்று கூறிவிட்டார் ஓபிஎஸ்.பேப்பர் எழுதி வைத்துவிட்டு சல்லி காசு கூட ஒதுக்கவில்லை - பொங்கி எழுந்த சேகர் பாபு!
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நாஞ்சில் சம்பத், “தீர்மானத்தை ஆதரிக்காமல் பாஜகவை பின்தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களுக்குக் கொஞ்சம்கூட அரசியல் தெரியவில்லை. அரசியலில், தற்கொலை செய்வதற்கென்றே தயார் செய்யப்பட்டவர்கள் போலத்தான் இவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்த வெளிநடப்பின் போதுதான் ஓபிஎஸ் இந்தப் பாடல் வரிகளைப் பாடியிருக்கிறார். அவரது உள்ளக்கிடக்கையை இந்தப் பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad