முன்னாள் அமைச்சரை அணைத்துக் கொண்ட திவாகரன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் ஆள்காட்டி யம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரம்
ஆதினம் நேற்று முன்தினம் இரவு வருகை தந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.
நேற்று முன் தினம் ஆன்மீக நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று அரசியல் நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு ஆலய வளாகத்தில் அவர்களது ஆதரவாளர்கள் விளம்பர பதாகைகளை வரவேற்பதற்க்காக வைத்திருந்தனர்.
இந்நிலையில் கும்பாபிசேகம் முடிந்து ஆள்காட்டி அம்மனுக்கு அபிசேகம் நடைபெற்றது. அப்பொழுது சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த படி வணக்கம் வைத்து கொண்டனர். இருவரும் ஒன்றாக நின்று
சுவாமி தரிசனம் செய்தனர்.தரிசனம் முடிந்து கோயில் பிரகாரத்தில் இருவரும் வலம் வந்த போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் முன்னாள் அமைச்சர் காமராஜுடைய தோளில் கைபோட்டு பேசிய படி நடந்து சென்றனர். மன்னார்குடி ஆள்காட்டி அம்மன் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தோளோடு தோள் கைபோட்டு பேசியது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment