என்னது..! மீண்டும் முழு ஊரடங்கா? - சுகாதார அமைச்சர் சொன்ன விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

என்னது..! மீண்டும் முழு ஊரடங்கா? - சுகாதார அமைச்சர் சொன்ன விளக்கம்!

என்னது..! மீண்டும் முழு ஊரடங்கா? - சுகாதார அமைச்சர் சொன்ன விளக்கம்!

மஹாராஷ்டிர மாநிலத்தில், மீண்டும் புதிதாக பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணமில்லை என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்து உள்ளார்.


இந்தியாவிலேயே, கொரோனா முதல் அலை, இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா தான். இம்மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், மஹாராஷ்டிர மாநில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், செய்தியாளர்களிடம் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் பேசியதாவது:
வரும் நாட்களில், மாநிலத்தில் புதிதாக பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை. விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளை பொது மக்கள் கொண்டாடும் போது கவனமாக கொண்டாட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad