திமுகவிற்கு சவுக்கடி; செல்லூர் ராஜூ போட்ட பலே கணக்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

திமுகவிற்கு சவுக்கடி; செல்லூர் ராஜூ போட்ட பலே கணக்கு!

திமுகவிற்கு சவுக்கடி; செல்லூர் ராஜூ போட்ட பலே கணக்கு!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான
திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. திமுக அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. குறிப்பாக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக ஏமாற்றுகிறது, திசை திருப்புகிறது என்று கூறி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷின் மரணம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தொடரும் நீட் சோகம்

நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என்று பொதுக்கூட்ட மேடையில் முழங்கி விட்டு, அதற்காக திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல் இப்படி மேலும் ஒரு மாணவரை நீட்டிற்கு தாரை வார்த்துவிட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் மற்றும் ஆர்.ஜெ.தமிழ்மணி அறக்கட்டை சார்பில் ஜெய்ஹிந்த்புரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாம்

இதில் ஜெயந்தி
செல்லூர் கே.ராஜூ, மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா, பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாம ை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, ஆட்சியில் இல்லை என்றாலும் கழக ஒருங்கிணைப்பாளர் உத்தரவின்படி இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

திமுக அரசு மீது கடும் விமர்சனம்

கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் அதிமுக அரசு மிகப்பெரிய புரட்சியை படைத்திருக்கிறது. ஆனால் தற்போது ஆளும் அரசு மக்களை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. நமது கழகம் மீது பல்வேறு பொய்யான தகவல்களை கூறி வருகிறது. இவற்றை எல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “தேனாறும் பாலாறும் ஓடும்” என்று கூறினார்கள்.
ஆனால் தற்போதைய நிலை உங்களுக்கே தெரியும். எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி நிறைவேற்றாமல் காலம் கடத்துகின்றனர். இதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் திமுகவிற்கு வரும் காலங்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad