கொடநாடு வழக்கை சும்மா விட மாட்டோம்; யாரும் தப்பிக்க முடியது: ஸ்டாலின் சூளுரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

கொடநாடு வழக்கை சும்மா விட மாட்டோம்; யாரும் தப்பிக்க முடியது: ஸ்டாலின் சூளுரை!

கொடநாடு வழக்கை சும்மா விட மாட்டோம்; யாரும் தப்பிக்க முடியது: ஸ்டாலின் சூளுரை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணையை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கின் மறு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை முன்னிறுத்தி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், இது அரசியல் நோக்கத்திலான விசாரணைகள் அல்ல; உண்மை குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையிலேயே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், கொடநாடு வழக்கை நடத்துவோம் என்றும் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியில் வன்முறை இல்லை, சாதிச்சண்டைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, துப்பாக்கிச்சூடு இல்லை என குறிப்பிட்ட அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தின் மர்மங்கள் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றும் தகவல் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நவீன வழிமுறைகளை கொண்டதாக காவல்துறை மாற்றியமைக்கப்படும் எனவும், சாதி, மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டிஜிபி சைலேந்திர பாபுவின் நியமனம் பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad