சமூக நீதியில் வரலாறு படைக்க வேண்டும்: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி புதிய மசோதா தாக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

சமூக நீதியில் வரலாறு படைக்க வேண்டும்: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி புதிய மசோதா தாக்கல்!

சமூக நீதியில் வரலாறு படைக்க வேண்டும்: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி புதிய மசோதா தாக்கல்!

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்கு இன்றளவும் எதிர்ப்பே நிலவி வருகிறது. ஏராளமான மாணவர்களின் உயிரையும்
நீட் தேர்வு காவு வாங்கியுள்ளது. அனிதா தொடங்கி நேற்று மாணவன் தனுஷ் வரை இத்தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கையிலும் கூட நீட் தேர்வுக்கு விலக்கு கோரி புதிய மசோதா தாக்கல் செய்து அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி குறிப்பிட்டிருந்தது.

அந்த வகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது. அக்குழுவானது அரசிடம் தங்களது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நீட் என்னும் தேர்வைக் கொண்டுவந்து மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்குத் தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது: “நீட் தேர்வை ரத்து செய்ய, திமுக அரசு அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுகவினுடைய தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். அதை நிறைவேற்றும் வகையில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவினை இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

இதற்கான அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையில், சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆகவே, இன்று என்னால் இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad