கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு சிக்கல்; தீர்வு காணுமா தமிழக அரசு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு சிக்கல்; தீர்வு காணுமா தமிழக அரசு?

கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு சிக்கல்; தீர்வு காணுமா தமிழக அரசு?

பாமக நிறுவனர்

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் சராசரியாக 90% இடங்கள் நிரப்பப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள இடங்களும் அடுத்த சில நாட்களில் நிரப்பப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் கிடைக்காததால் அவர்களால் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை.

கல்வியை தொடர முடியாத சூழல்

கல்லூரிக் கல்வி இயக்குனரின் அனுமதி பெற்று கூடுதல் இடங்களில் மாணவர்களைச் சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால் அதிக எண்ணிகையில்

மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொலைதூரப் பகுதிகளையும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களையும் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களால் வீட்டிலிருந்து தினமும் கல்லூரிகளுக்கு சென்று திரும்புவது சாத்தியமில்லாத ஒன்றாகும். அவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படாவிட்டால், அவர்களில் பெரும்பான்மையினரால் கல்லூரிக் கல்வியை தொடர முடியாமல் போய்விடும். அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு விடுதிகளில் இடம் கிடைக்காமைக்கு திட்டமிடலில் தொலைநோக்கு இல்லாமையும்,

No comments:

Post a Comment

Post Top Ad