நன்றி சொன்ன ஓபிஎஸ்: லிஸ்ட்டில் சசிகலா பெயர் மிஸ்ஸிங்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

நன்றி சொன்ன ஓபிஎஸ்: லிஸ்ட்டில் சசிகலா பெயர் மிஸ்ஸிங்!

நன்றி சொன்ன ஓபிஎஸ்: லிஸ்ட்டில் சசிகலா பெயர் மிஸ்ஸிங்!

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி காலமானார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்தினர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் பலரும் ஓபிஎஸ்-க்கு நேரில் ஆறுதல் கூறினர். அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர்.

அந்த வகையில், ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரில் சென்று ஒபிஎஸ்-சை சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். ஒபிஎஸ் கைகளை பற்றி அவரது மனைவியின் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பொதுவெளியில் சந்தித்துக் கொண்டது இதுவே முதல்முறை. அதேபோல், டிடிவி தினகரனும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

இந்த நிலையில், தனது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தொடங்கி பிரதமர், தமிழ்நாடு முதல்வர், ஆளுநர்கள், அண்டை மாநில முதல்வர், எதிக்கட்சித் தலைவர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மிக நீண்டதொரு பட்டியலை வெளியிட்டு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad