ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு!
தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்றுவரை 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரீலனை 23ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி
நாள் வருகிற 25ஆம் தேதியாகும். இந்த தேர்தலில் பாமக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் அக்கூட்டணியிலேயே தொடர்கிறது.
No comments:
Post a Comment