மூடப்படும் ஃபோர்டு நிறுவனம்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் அதன் நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளது. இதனால், சுமார் 4000 தொழிலாளர்கள், அந்நிறுவனத்தின் மூலம் மறைமுகமான வேலைவாய்ப்பை பெற்றிருந்தவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால்,
ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் உள்பட அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் மூடப்படவுள்ள ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
“ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கினால் தமிழக அரசு தேவையான ஒத்துழைப்பை அளிக்கும். அதே நேரத்தில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது” என்று தொழில் துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “ஃபோர்டு நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசின் மூலமாக சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார்
No comments:
Post a Comment