கொடநாடு வழக்கு: மீண்டும் ஒத்திவைத்த உதகை நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

கொடநாடு வழக்கு: மீண்டும் ஒத்திவைத்த உதகை நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு: மீண்டும் ஒத்திவைத்த உதகை நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதல் இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இன்று . உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராக சயான்

உதகை நீதிமன்றம் வந்திருந்தார். குன்னூர் சிறையில் உள்ள வாளையாற ு மனோஜ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கூடுதல் விசாரணை தேவைப்படுவதால் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad