''இந்த நைட் இருப்பேனானு தெரியல'' புகுந்த வீட்டு கொடுமையால் இளம்பெண் தற்கொலை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

''இந்த நைட் இருப்பேனானு தெரியல'' புகுந்த வீட்டு கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!

''இந்த நைட் இருப்பேனானு தெரியல'' புகுந்த வீட்டு கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!

கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்த விளங்கும் அண்டை மாநிலமான கேரளாவில் அண்மை காலமாக வரதட்சணை கொடுமைகளால் புதுப்பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த வகையில் விஸ்மயா, அர்ச்சனா, உத்ரா ஆகியோரின் வரிசையில் தற்போது சுனிஷா என்று பெண்ணும் மர்மமான முறையில் கணவர் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிஷா (26).சுனிஷாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பையனூரைச் சேர்ந்த விஜீஷ் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடந்து கணவன் வீட்டில் வசித்து வந்த சுனிஷா பெற்றோருக்கு அடிக்கடி போன் செய்து தன்னை இங்கு அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் பலமுறை சுனிஷாவின் பெற்றோர் விஜிஷ் வீட்டுக்கு நேரில் வந்து சமாதானம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுனிஷா வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக சகோதரனுக்கு அனுப்பி வைத்துள்ள ஆடியோ பதிவு, அவர் அனுபவித்த சித்ரவதைகளை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், '' உங்களால் முடிந்தால், தயவுசெய்து இப்போதே வந்து என்னை அழைத்து கொண்டு செல்லுங்கள். ரோட்டுக்கு வாருங்கள் நான் வரத் தயாராக இருக்கிறேன், கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்து சித்ரவதை செய்கின்றனர். இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை'' என இவ்வாறு சுனிஷா கண்ணீர்மல்க பேசியுள்ளார். ஆனால், சுனிஷா வீட்டில் இருப்பவர்கள் உடனே அங்கு சென்றார்களா என்று தெரியவில்லை. இதற்கு மத்தியில் சுனிஷா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து சுனிஷாவின் உறவினர்கள் உள்ளூர் மீடியாக்களிடம் பேசியபோது, '' வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான சுனிஷாவை அவரது கணவரும், மாமியாரும் சேர்ந்து தலைமுடியை பிடித்து கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். அதுபோல, மாமனார் ஹெல்மெட்டை வைத்து தாக்கியதாகவும் எங்களிடம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad