ஜிம்மில் இறந்தது சித்தார்த் ஷுக்லாவா? அதிர்ச்சி சம்பவம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

ஜிம்மில் இறந்தது சித்தார்த் ஷுக்லாவா? அதிர்ச்சி சம்பவம்..!

ஜிம்மில் இறந்தது சித்தார்த் ஷுக்லாவா? அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பனஷங்கரி கடந்த 25ம் தேதி அன்று 33 வயதான இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்துவிட்டு ஜிம்மிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
பனஷங்கரியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 33 வயதான இளைஞர் ஒருவர் ஜிம் பயிற்சி முடித்துவிட்டு அசதியாக படிக்கட்டில் வந்து அமருகிறார். அப்போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் வேர்க்க தொடங்கியுள்ளது. இந்த விஷயத்தை அங்கு யாரிடமும் சொல்லாமல் அவர் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பின்னர் மீண்டும் படியில் இருந்து எழுந்து நடந்தவர் மீண்டும் படிக்கட்டில் வந்து அமர, சில நொடிகளில் அங்கேயே நிலைதடுமாறி சுருண்டு விழுந்துள்ளார். இதுகுறித்து கன்னட ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், அந்த நபர் மருத்துவமனைக்கு கொன்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் ஹிந்தி பிக் பாஸ் 13ம் சீஸனின் டைட்டில் வின்னர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஜிம்மில் உயிரிழந்த நபர்தான் சித்தார்த் ஷுக்லா என்றும் வதந்திகள் கிளம்பின. ஆனால், இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம் இளைஞரின் உயிரிழப்பை அடுத்து, இளைஞர்கள் அதிகப்படியான உடற்பயிற்சியில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முழுமையான இதய பரிசோதனை மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே அனைவரும் ஜிம்மிற்கு போக தயாராக வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad