ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கிறது தலிபான்! - யார் தலைமையில் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கிறது தலிபான்! - யார் தலைமையில் தெரியுமா?

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கிறது தலிபான்! - யார் தலைமையில் தெரியுமா?

ஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான்களின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுன்ஜடா தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேற்றுடன், அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன. இதை அடுத்து தலிபான் அமைப்பினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். காபூல் விமான நிலையம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை, நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தொடங்கி உள்ளது. இதற்காக முந்தைய அரசில் இருந்த மூத்த தலைவர்களுடன், தலிபான்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:


ஆப்கானிஸ்தானில் புதிய அரசு, அமைச்சரவை அமைப்பது தொடர்பாக, முந்தைய ஆப்கன் அரசில் இருந்த மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. அதில், தலிபான் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுன்ஜடா தலைமையில், புதிய அரசு அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அமைப்பின் துணைத் தலைவராக உள்ள முல்லா அப்துல் கனி பராதர், நாட்டின் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். புதிய அரசு அனைத்து தரப்பினரும் இணைந்ததாக இருக்கும். அடுத்த சில நாட்களில் புதிய அரசு தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும். அகுன்ஜடா மற்றும் பராதர் மக்களிடையே தோன்றுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசை ஆதரிப்பதாக, சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad