தாலிபான்களின் அடுத்த குறி காஷ்மீர்? அல்கொய்தா விடுக்கும் அழைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

தாலிபான்களின் அடுத்த குறி காஷ்மீர்? அல்கொய்தா விடுக்கும் அழைப்பு!

தாலிபான்களின் அடுத்த குறி காஷ்மீர்? அல்கொய்தா விடுக்கும் அழைப்பு!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அங்கு நிலையான ஆட்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். ஊடகத்துறையினர் மிரட்டப்பட்டு துப்பாக்கி முனையில் செய்திகள் வெளியாவதாக கூறுகின்றனர்.


இந்நிலையில் நாளைக்குள் ஆப்கானிஸ்தானின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய ஆட்சி பொறுப்புகளுக்கான நபர்களை தாலிபான்கள் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான்களின் தலைவர் ஹெபதுல்லா அகுசண்டாவே பிரதமர் பதவியை வகிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்காக அல்கொய்தா அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவை அவமானப்படுத்தி விரட்டியிருக்கும் தாலிபான்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

“ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்காவை விரட்டியிருப்பதன் மூலம் உலகளாவிய வகையில் அமெரிக்காவின் மரியாதை சிதைக்கப்பட்டிருக்கிறது, இந்த பெருமை இறைவனையே சேரும்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியாகிவிட்டது. அடுத்ததாக காஷ்மீர், பாலஸ்தீனம், சோமாலியா, ஏமன் போன்ற இஸ்லாமிய நிலங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்” என அல்கொய்தா அமைப்பினர் தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad