இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: திடீர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: திடீர் அறிவிப்பு!

இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: திடீர் அறிவிப்பு!

அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயலால் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியால் தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்து உள்ளன. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கனமழையால் ஏராளமான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக் காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றான. பாதுகாப்பான இடங்களில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அம்மாகண ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து, நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழை அடுத்த சில மணி நேரங்கள் பெய்யும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், சுரங்கபாதைகள், சாலை ஓரங்கள் ஆகிய பகுதிகளில் யாரும் நிற்கவேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக அனைவரும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றால் சிதைந்த பொருள்கள் பறந்துவந்த மக்களை தாக்க வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு கீழ் தளங்களில் இருங்கள். ஜன்னல் அருகே நிற்க வேண்டாம் என்று நியூயார்க் நகரத்தின் அவசர அறிவிப்பு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், நியூஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad