முதல் மரபணு பகுப்பாய்வு மையம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

முதல் மரபணு பகுப்பாய்வு மையம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதல் மரபணு பகுப்பாய்வு மையம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 91 இளநிலை உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 11ஆவது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகளைக் கொண்ட இந்த ஆய்வகத்தில், பெங்களூரில் பயிற்சி முடித்த 6 பேர் உள்பட 10 பேர் உள்ள குழுவினர் பணியாற்ற உள்ளனர்.

ஒரே நேரத்தில் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் இந்த ஆய்வகத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad