உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் மாவட்ட பொறுப்பாளர்களை கூடுதலாக
அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;

நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம்

நத்தம் விசுவநாதன் எம்எல்ஏ

வேலூர்

சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ ,முக்கூர் சுப்ரமணியன்

திருநெல்வேலி

ராஜலட்சுமி முன்னாள் அமைச்சர், கோபாலகிருஷ்ணன் ex MP , ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ


சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளார்களுக்கும் முத்து ஒத்துழைப்பு நல்கி, தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்'' என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad