நடிகர் விஜய் என்ன சாதி? மனம் திறந்த தந்தை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

நடிகர் விஜய் என்ன சாதி? மனம் திறந்த தந்தை!

நடிகர் விஜய் என்ன சாதி? மனம் திறந்த தந்தை!

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டவர்
நடிகர் விஜய். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதுடன், சமூகம் சார்ந்து பல்வேறு கருத்துகளையும் துணிச்சலாக கூறுபவர். அவ்வாறு அவர் கூறுகையில், சிலர் வேண்டுமென்றே அவரது மதத்தையும், பெயரையும் கூறி விமர்சிப்பதுண்டு.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழ் குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேசியுள்ளார். ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சாயம்”. படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

மேலும், சாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய்யின் சாதி சான்றிதழ் குறித்து பகிர்ந்து கொண்டார். “எனது மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும் அமைதியாக ஒப்புக் கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் உள்ளது. நாம் நினைத்தால் சாதியே இல்லாமல் செய்து விடலாம். அது நம் கைகளில்தான் உள்ளது” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad