தங்க நகைக்கடன் தள்ளுபடி ஏன்? குண்டை தூக்கி போட்ட திண்டுக்கல் சீனிவாசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

தங்க நகைக்கடன் தள்ளுபடி ஏன்? குண்டை தூக்கி போட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

தங்க நகைக்கடன் தள்ளுபடி ஏன்? குண்டை தூக்கி போட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன், கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கழகம் எதிர்க்கட்சி ஆன பின்னரும் தொழிற்சங்கம் சிறிதும் தொய்வில்லாமல் செயல்பட்டு வருகிறது.

ஒற்றுமை அவசியம்

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பழி வாங்கப்படுகின்றனர். எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் இடமாறுதல் செய்யும் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எது நடந்தாலும் தொழிற்சங்க பேரவை தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 62 கழக எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஆனால் தற்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்தில் அதிமுக

சிலர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சி இடத்தில் அமர்ந்திருக்கிறோம். இல்லையெனில் நமது கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கும். அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,500 கிடைத்திருக்கும். வருடந்தோறும் 6 இலவச கேஸ் சிலிண்டர்களை தமிழக மக்கள் பெற்றிருப்பர். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

தங்க நகைக்கடன் அறிவிப்பு எதற்காக?

இந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கப் பார்க்கிறது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000 இருந்தால் போதும் என்று கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் குடும்ப வருமானம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் கிடைக்காதாம்.

No comments:

Post a Comment

Post Top Ad