தமிழிசை கொடுத்த அசத்தலான பரிசு: ஓகே சொன்ன தமிழக ஆளுநர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 22, 2021

தமிழிசை கொடுத்த அசத்தலான பரிசு: ஓகே சொன்ன தமிழக ஆளுநர்!

தமிழிசை கொடுத்த அசத்தலான பரிசு: ஓகே சொன்ன தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 18ஆம் தேதியன்று ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் ஆர்.என்.ரவிக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.என்.ரவி 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். சிபிஐ, இந்திய‌ உளவுத்தறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அவர், 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமான ஆர்.என்.ரவி தற்போது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழிசையின் கனவரும் உடனிருந்தார். அப்போது ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான கதர் வேட்டி, சட்டை பரிசளித்து தனது வாழ்த்துகளை தமிழிசை தெரிவித்துக் கொண்டார்.

ஆளுநரிடம் பேசியபோது, தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் இன்று இதே நாளில்தான் நவநாகரிக உடைகளை களைந்து கதர் வேட்டி அணிந்தார் என்பதை நினைவு கூர்ந்ததாக தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழகத்தின் பாரம்பரிய உடையை தாங்கள் பரிசளித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அணிந்து கொள்கிறேன் என்று கூறியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

இந்திய வரலாற்றின் திசையை மதுரை மேலமாசி வீதி மாற்றி எழுதியதன் நூற்றாண்டு இன்று. 1921ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள், தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி செய்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad