ஹெட்சன் நிறுவனம் உரிய சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை: தர்மபுரியில் போராட்டம்!
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொலசன அள்ளி கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்காலிகமாகவும் நிரந்தமாகவும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள்
பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளி சந்தை ஆகிய உள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தர்மபுரி டிஸ்ட்ரிக் மில்க் யூனியன் என்ற சங்கத்தைத் தொடங்கிக் குறைந்த பட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் நிர்வாகம் சங்க பிரதிநிதிகளைப் பழிவாங்கி வருவதாகவும் அதன் ஒரு கட்டமாக ஊழியர்களுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி திடீர் திடீரென பெங்களுர், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பணி மாறுவதால் வழங்கி வருவதாகச் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்
அதன்படி காலை பணிக்குச் சென்ற ஊழியர்கள் 10 பேரை திடீர் என மகாராஷ்டிரா, மும்பை, தெலங்கானா மாநிலத்திற்குப் பணி மாறுதல் செய்ததால் அதிர்ச்சியடைந்த
ஊழியர்கள் நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கைக் கண்டித்து நிறுவனத்தின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment