உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு!

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, கூட்டணி, விருப்பமனு வாங்குவது உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நேற்று பாமக அறிவித்தது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தனித்து போட்டியிடுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் 16,17 ஆகிய 2 நாட்கள் மாவட்டக் கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட அடிப்படை உறுப்பினராக இருப்பது அவசியம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விருப்ப மனுவுக்கு ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad