நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம்? ஜோதிமணி சொன்ன பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 21, 2021

நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம்? ஜோதிமணி சொன்ன பதில்!

நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம்? ஜோதிமணி சொன்ன பதில்!

தமிழ்நாட்டில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அமைத்தது.



2010-11ஆம் ஆண்டில் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு சுமார் 20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது சுமார் 1 சதவீதமாக குறைந்துள்ளது. இது போல பல தரவுகளை ஏ.கே.ராஜன் அறிக்கை கொண்டுள்ளது. மேலும் பல தரப்பினரின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இது குறித்த தரவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள காங்கிரஸ் எம்பி, “ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசு பள்ளிகளில்,தமிழ் வழியில்,போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிட்டியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணி உள்ளிட்ட பல தலைவர்கள் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, காங்கிரஸ் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்காடுகிறார் என்ற விமர்சனங்களும் உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad