மக்கள் ஹேப்பி அண்ணாச்சி: ப.சிதம்பரம் ஏன் சொன்னார் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி: ப.சிதம்பரம் ஏன் சொன்னார் தெரியுமா?

மக்கள் ஹேப்பி அண்ணாச்சி: ப.சிதம்பரம் ஏன் சொன்னார் தெரியுமா?

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது, நிவாரணம் வழங்கியது, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவது, எதிர்கட்சிகளையும் அரவணைத்து செல்வது என ஸ்டாலின் பல்வேறு விஷயங்களில் ஸ்கோர் செய்கிறார்.

இதனால் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஸ்டாலினை பாராட்டி பேசியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், “எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “அழகப்பா பல்கலை கழகத்திற்கு உடனடியாக புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும். கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என மோடி அரசு கூறியது உண்மை அல்ல தவறான தகவலை கூறியுள்ளது” என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad