ஓராண்டு முடிந்திருந்தால் போதும்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தகவல்..!
தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2016ஆம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து அரசாணையும் வெளியானது. இந்நிலையில்,
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ராஜகுரு அந்த மனுவில் ''அத்தகைய தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் எஎன்றும், அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட
ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது.
மேலும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றும் கூறப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.
No comments:
Post a Comment