நாம் தமிழர் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஒருவரும் திமுகவில் இணைந்தார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

நாம் தமிழர் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஒருவரும் திமுகவில் இணைந்தார்!

நாம் தமிழர் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஒருவரும் திமுகவில் இணைந்தார்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய வழக்கறிஞர் ராஜிவ் காந்தி கடந்த ஜனவரி 27ஆம் தேதி திமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளும் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் சுனில் என்பவரும் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுனில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தவர் சுனில். இவர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 11ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலரானார்.


நாம் தமிழர் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே கவுன்சிலர் என்ற பெருமையை கொண்ட சுனில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் இந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad