மிரட்டுகிறார்கள்; தலைமறைவாக இருக்கிறோம்: சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

மிரட்டுகிறார்கள்; தலைமறைவாக இருக்கிறோம்: சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!

மிரட்டுகிறார்கள்; தலைமறைவாக இருக்கிறோம்: சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

பாமக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் அக்கூட்டணியிலேயே தொடர்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஏற்கப்பட்டதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபனின் நினைவு நாள் நாம் தமிழர் கட்சி சார்பில் போரூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர்தூவி மலர்வணக்கம் செலுத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை மையப்படுத்தி தான் இனி அரசியல் சுத்தும். உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் ஆட்களை கடத்துகிறார்கள். பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகி இருந்தால் பணமும், அரசு வேலையும், ஒப்பந்தமும் தருவதாக கூறுகிறார்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad