உள்ளாட்சி தேர்தல் - களத்தில் 79,433 வேட்பாளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு..!
தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில்,
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 27003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்துர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள 27002 பதவியிடங்களுக்கு 98151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில், 1166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 14571 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற்று கொண்டனர்.
2981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23998 பதவியிடங்களுக்கு 79433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment