அமலுக்கு வரும் புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 23ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.
சட்டப்பேரவை 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் சட்டத்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 13ஆம் தேதியுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அவை
தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, அனைத்துத்துறை சார்ந்த செயலாளர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment