தம்பிதுரை மீது நில ஆக்கிரமிப்பு புகார்: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம
பொதுநலச் சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
“எங்கள் கிராமப் பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசுக் கட்டிமும் இல்லை. குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சாரத் துணை நிலையம், தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டத
ு என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்தப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment