மெகா தடுப்பூசி முகாம் கிடையாது: அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

மெகா தடுப்பூசி முகாம் கிடையாது: அமைச்சர் சொன்ன தகவல்!

மெகா தடுப்பூசி முகாம் கிடையாது: அமைச்சர் சொன்ன தகவல்!

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தினமும் 50,000 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகளில் ஒன்றான, கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க இருக்கிறார். பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது,மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 சிறப்பு துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

11 மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளோம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட பணிகளை சரிவர முடியவில்லை . அதனை மீண்டும் ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் அந்த கட்டட பணிகள் முடிந்துவிடும். இந்த நான்கு கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவமனைகளில் தலா 150 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கைக்கும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad