ஊரடங்கில் அடுத்தக்கட்ட நகர்வு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

ஊரடங்கில் அடுத்தக்கட்ட நகர்வு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவு!

ஊரடங்கில் அடுத்தக்கட்ட நகர்வு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவு!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்தது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன். தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


அதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அடுத்தடுத்தடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆனால், தொடக்கப்பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்கிறது.

மேலும், பொதுமக்கள் நலன் கருதி அதிகப்படியான பொதுமக்கள் கூடும் திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அக்டோபர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இதுவரை தமிழகம் முழுவதும் மூன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் முன்னர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தே அவர் வெளியிட்டு வருகிறார்.



அதன்படி, இன்றைய கூட்டத்தின் போது ஆரம்பப் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறை பல கட்டங்களாக ஏற்கனவே நடத்திய ஆலோசனைகளின் போது பெறப்பட்ட கருத்துகளையும், பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் ஸ்டாலினிடம் அளித்துள்ளது. எனவே, ஆரம்பப் பள்ளிகள் திறப்பு, மதவழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருந்தப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா முதல் அலையை பொறுத்தவரை ஒன்றிய அரசு அனைத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தது. அனைத்து முடிவுகளையும் ஒன்றிய அரசே எடுத்து வந்தது. இரண்டாவது அலை உச்சம் தொட்ட போது, மாநில அரசுகளின் கைகளுக்கு பெரும்பாலும் அதிகாரம் மாறியது. அந்த வகையில், தற்போது மூன்றாவது அலை குறித்த பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், மைக்ரோ பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. உதாரணமாக கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட அளவில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது கவனிக்கத்தக்கது.

அதேசமயம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தின் போது அதிகளவில் அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டியதை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இத்தகைய விமர்சனங்கள் அரசு மீது விழுந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக உள்ளார். மேலும், வாக்குச்சீட்டு முறை என்பதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதும் கொரோனா காலகட்டத்தில் சவாலான ஒன்றாக உள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவெடுத்து ஊரடங்கு தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad