விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி கிடையாது.

ஆனால், விநாயகர் ச துர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜக, இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை; ஆனால், பிற மத விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாஜகவினர் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். இதனால், தமிழக பாஜக சார்பில் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பதிலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுகவின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு, புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad