மு.க.ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பார்? ஆளுநர் நடத்தும் ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 22, 2021

மு.க.ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பார்? ஆளுநர் நடத்தும் ஆலோசனை!

மு.க.ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பார்? ஆளுநர் நடத்தும் ஆலோசனை!

தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டார். செப்டபம்பர் 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்திற்கு புதிய ஆளுநர் வருமுன்னே சர்ச்சைகள் வந்தன. முக்கியமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் பாஜக அரசால் கிரண் பேடி துணை நிலை ஆளுநராக கொண்டுவரப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கிரண் பேடி, நாராயணசாமி ஆட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டார் என பல விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் - ஆளுநர் பஞ்சாயத்தில் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் அப்போதே கருத்து தெரிவித்தனர்.அதேபோன்ற நெருக்கடியை தமிழகத்தில் ஸ்டாலின் அரசுக்கு கொடுப்பதற்காகவே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவி கொண்டுவரப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியுள்ளார். புதிதாக ஆளுநர் பதவியேற்றால் காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களாகவே மரியாதை நிமித்தமாக சந்திப்பர். ஆனால் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை ஆளுநரே அழைத்து நேற்று அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இன்று உளவுத்துறை உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை வரவழைத்து பேசியுள்ளார். நாளையும், நாளை மறுநாளும் உள்துறைச் செயலாளரையும், தலைமைச் செயலாளரையும் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வருகின்றன.

முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் நான்கு மாத காலத்தை வெற்றிகரமாகவே கடந்துவந்துள்ளார். பெரியளவில் விமர்சனங்கள் எழவில்லை. எதிர்கட்சிகளும் ஆட்சிக்கு எதிராக அணி திரளவில்லை. வலுவான எதிர்கட்சியாக இருந்தும் அதிமுகவால் முதல்வருக்கு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்க முடியவில்லை.

ஆனால் இனிதான் ஸ்டாலின் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவாரா, அதை ஸ்டாலின் தலைமையிலான அரசு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழக அரசியல் அரங்கில் இனிதான் அதிரடி காட்சிகள் அரங்கேறப்போகின்றன என்று ஆரூடம் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad