மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்: இலவச லேப்டாப், உதவித்தொகை அறிவிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்: இலவச லேப்டாப், உதவித்தொகை அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்: இலவச லேப்டாப், உதவித்தொகை அறிவிப்பு..!

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு. அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது என்றும் அதற்காக ரூ.10, 200 கோடி செலவாகும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்த நிலையில், பள்ளியில் லேப்டாப் கிடைக்காத 11,12 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சில தொழில்நுட்ப கல்லூரிகளில், நிலையங்களில் மட்டும் சலுகை அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தோல் தொழில்நுட்ப கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் இயங்கி வரும் சிபிடி கல்வி வளாகத்தில் உள்ள தோல் தொழில்நுட்ப பயிலகத்தில் மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்காக சேரும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப், சென்று வர இலவச பஸ்பாஸ் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு சென்னை மாணவர்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது. அதுபோல அண்மையில், அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் சேர பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அறிவித்தார். அந்த அறிவிப்பில், அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்மியர் கருவிகள், கோபா. செயலகப் பயிற்சி, கட்டிடப் பட வரைவாளர் தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் (www.skiltraining. tn.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித் தொகை, இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை அளிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதிமுக ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இலவச லேப்டாப் திட்டம்
மாணவர்களுக்கு நேரிடையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தொழில்நுட்ப சார்ந்த படிப்பில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad