"ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் நாளை மாநாடு - முதல்வர் தொடங்கி வைப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 21, 2021

"ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் நாளை மாநாடு - முதல்வர் தொடங்கி வைப்பு

"ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் நாளை மாநாடு - முதல்வர் தொடங்கி வைப்பு

செப்டம்பர் 22 (நாளை) காலை 10.45 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
அதுகுறித்து வெளியான அறிவிப்பில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து “வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது

வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கவும் மற்றும் விழா பேருரையாற்றவும் இசைவு அளித்துள்ளார். உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன. இக்கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 அன்று மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

துவக்க விழாவில் முதலமைச்சர் “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை” மற்றும் “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஆகியவற்றை வெளியிடுவார். இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன.



மேலும், இவ்விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad