"டகால்டி" வேலையில் பா.ஜ.க.,? - யோகி அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

"டகால்டி" வேலையில் பா.ஜ.க.,? - யோகி அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்!

"டகால்டி" வேலையில் பா.ஜ.க.,? - யோகி அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்!

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வெளியிட்டுள்ள சாதனை விளம்பரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில், கொல்கத்தாவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இடம்பெற்றுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் தான் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்ட திட்டங்களை விளக்கும் வகையிலான விளம்பரங்களை பா.ஜ.க. வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று 'Transforming Uttar Pradesh under Yogi Adityanath' என்ற தலைப்பில் யோகி அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad