என் ஆட்சி நடக்குதா? திமுக ஆட்சி நடக்குதானே தெரியல... சீமான் பொளேர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

என் ஆட்சி நடக்குதா? திமுக ஆட்சி நடக்குதானே தெரியல... சீமான் பொளேர்

என் ஆட்சி நடக்குதா? திமுக ஆட்சி நடக்குதானே தெரியல... சீமான் பொளேர்

மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் இருவரது நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி இன்று நினைவேந்தல் அனுசரித்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசின் அறிவிப்புகள் பல நாங்கள் வைத்த கோரிக்கைகள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு கொடுக்க வேண்டும், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம், ஆண் காவலர்கள் 8 மணி நேரம் மட்டுமே ஒரு நாளைக்கு பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் ஏற்கனவே வைத்திருந்தோம்.

இப்போது உயர் நீதிமன்றமும் காவலர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சொல்வதை நீதிமன்றமும் கூட கேட்கிறது என்று சீமான் நகைப்புடன் பேசினார்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஓராண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் வைத்ததுதான். திமுக அரசு அதையும் நிறைவேற்றியுள்ளது என்று கூறிய சீமான் நடப்பது திமுக ஆட்சியா அல்லது நாம் தமிழர் ஆட்சியா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அப்போது சிரிப்பலை எழுந்தது

No comments:

Post a Comment

Post Top Ad